Friday, December 31, 2010

சென்னை எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்குதல்

திருவொற்றியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரம் செய்துக் கொண்டிருந்த எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தி.மு.கவைச் சார்ந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


வருகிற பிப்ரவரி மாதம் சென்னையில் எஸ்.டி.பி.ஐயின் மண்டல மாநாடு நடைபெற உள்ளதையொட்டி எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் சுவர் விளம்பரத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.டி.பி.ஐ உறுப்பினர் விநோத்தை தி.மு.கவினர் தாக்கியுள்ளனர். இதில் விநோத் காயமடைந்துள்ளார்.


இதற்கு முன்னர் தி.மு.கவினர் அம்லு கோவிந்தராஜன் என்ற பெண்மணியின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இச்செய்தியை கேள்விப்பட்டதும் சென்னை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரஷீத் மற்றும் அமீர் தலைமையில் எண்ணூர் சாத்தங்காடு போலீஸ் ஸ்டேசனை நோக்கி படையெடுத்தனர்.



போலீசார் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்ய மறுக்கவே இவர்கள் இரவு 1.30 மணிவரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ தொண்டர்களின் தொடர் வற்புறுத்தலுக்கிணங்க போலீசார் தி.மு.கவினர் மீது வழக்குப் பதிவுச் செய்தனர்.


Tuesday, November 16, 2010

முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்

புலனாய்வு அமைப்புகள் இந்துவவாதிகள் தான் உண்மை குற்றவாளிகள் என்று தங்கள் குற்றப் பத்திரிக்கையில் ஒரு சில வழக்குகளில் நீதிமன்றத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தும் கூட, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைகளில் இன்னும் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென SDPI கேட்டுக் கொள்கிறது.

SDPI தேசிய பொது செயலாளர் A. சயீத் அவர்கள் தனது அறிக்கையில், காவி தீவிரவாதத்தை கண்டிப்பதில் காங்கிரஸ் உண்மையிலேயே அக்கரையோடு இருந்தால், வெறுமனே சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு, பலிகடாவாக்கப்பட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யவும் காங்கிரஸ் பாடுபட வேண்டும்.
அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகளில் காவி தீவிரவாத கும்பல்களுக்கு தொடர்பு இருப்பதை புலனாய்வு அமைப்புகள் சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த மாபாதக செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டது தெளிவுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் மீதுள்ள பழி, களங்கம் நீங்கியுள்ளது என்று சயீத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்
.
மேலும், காங்கிரஸ் தலைவர்கள் புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்திய இந்த உண்மைகளை காங்கிரஸ் தலைவி திருமதி. சோனியகாந்தி அவர்களை இழிவாக பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக மட்டும் நன்கு பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில் பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அப்பாவி மக்களை அவர்கள் முற்றுலும் மறந்துவிட்டனர்.

எனவே, குற்றமற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யவும் அவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்துவிடாமல் அவர்களின் தொழில் முன்னேற்றம் நிரந்தரமாக முடக்கப்பட்டுவிடாமல் பாதுகாக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென்றும்.

தேசம் முழுவதும் முஸ்லிம்களை எளிதாக பலிகடாவாக்கும் போக்கை வரும்காலத்திலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசாங்கத்தை காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் சயீத் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அவர்களின் நாக்புர் அறிக்கையை சுட்டிக்காட்டி குற்றமற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக அவர் குரல் கொடுக்கவில்லையென்றால் நாடெங்கிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்துகளை ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புபடுத்தியது வெறும் அரசியல் விளையாட்டாகி விடும்.

மேலும் பாபர் மஸ்ஜித் தகர்ப்புக்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் யை குற்றம் சுமத்துவதோடு நிறுத்தி கொள்ளும் காங்கிரஸ் கட்சி சட்டப்படி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்

Friday, October 29, 2010

கேரள பஞ்சாயத்து தேர்தலில் சிறையில் இருந்தபடி வென்ற வேட்பாளர்

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடுபுழா பேராசிரியரை வெட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தொடுபுழா கல்லூரி பேராசிரியர் ஜோசப்பை வெட்டிய வழக்கில் அனஷ் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று வாழக்குலம் பஞ்சாயத்து தேர்தலில் சமூக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநா யக கட்சி வேட்பாளரை 1902 வாக்குகள் வித்தியாசத்தில் அனஷ் தோற்கடித்தார்.


நன்றி: தினகரன்

வெற்றிப் பெற்ற எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள்

கேரள மாநிலத்தில் முதன்முறையாக தேர்தலில் பங்கேற்ற சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் நான்கு நகரசபை வார்டுகளிலும், ஒரு ப்ளாக் பஞ்சாயத்திலும், ஏழு கிராமப் பஞ்சாயத்துகளிலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

பல்வேறு கட்சிகளைக் கூட்டணியில் உட்படுத்தி தேர்தல் களத்தில் குதித்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் முன்னணியினருக்கு மத்தியில் தன்னந்தனியாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ தனது தேர்தல் பிரவேசத்தை கம்பீரமாக்கியது.

வெற்றிப்பெற்ற இடங்களைத் தவிர 70க்கும் மேற்பட்ட வார்டுகளில் நிர்ணய சக்தி என்பதையும் எஸ்.டி.பி.ஐ நிரூபித்துள்ளது.

பத்தணம் திட்டா நகரசபையில் குலசேகரபதி வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் எஸ்.ஷைலஜா 244 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.

தொடுப்புழா நகரசபையில் கீரிக்கோடு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆசிரியை சுபைதா 310 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.



சொர்ணூர் நகரசபையில் முனிசிபல் வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பீனா 270 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.


கண்ணூர் நகரசபையில் கஸனாக்கோட்டை தெற்கு வார்டில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸுஃபீரா 325 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.


எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் 1903 வாக்குகளின் பெரும்பான்மையோடு எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் பேராசிரியர் அனஸ் வெற்றிப் பெற்றுள்ளார்.


முவாற்றுப்புழா பேராசிரியரின் கை வெட்டி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர் அனஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றிப்பெற்ற இதர வேட்பாளர்கள் வருமாறு:


எர்ணாகுளம் கடுங்கல்லசூர் பஞ்சாயத்து வார்டு-எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஸீனத் ஜலீல் வெற்றி

ஈராட்டுப்பேட்டை பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் என்.என்.பினு நாராயணன் வெற்றி

கொல்லம் குலசேகரபுரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ ஆதரவுப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் எ.நாஸர் வெற்றி

கொல்லம் போருவழி பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஆமினா வெற்றி

திருச்சூர் சுவனூர் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஷாமிலா கபீர் வெற்றி

காஸர்கோடு மஞ்சேஷ்வரம் பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் மைமூனா வெற்றி

மலப்புரம் வேங்கர பஞ்சாயத்து வார்டு - எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் கதீஜா ஷம்ஸ் வெற்றி

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

Friday, September 3, 2010

சென்னையில் பட்டாளி மக்கள் கட்சியின் இஃப்தார் விழா

கடந்த செப்டம்பர் 1 அன்று சென்னையில் இம்பிரியல் ஹோட்டலில் பட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சி தலைவர் டாக்டர். ராமதாஸ் அவர்கள் தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் இப்ராஹிம், சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.