Tuesday, November 16, 2010

முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்

புலனாய்வு அமைப்புகள் இந்துவவாதிகள் தான் உண்மை குற்றவாளிகள் என்று தங்கள் குற்றப் பத்திரிக்கையில் ஒரு சில வழக்குகளில் நீதிமன்றத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தும் கூட, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைகளில் இன்னும் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென SDPI கேட்டுக் கொள்கிறது.

SDPI தேசிய பொது செயலாளர் A. சயீத் அவர்கள் தனது அறிக்கையில், காவி தீவிரவாதத்தை கண்டிப்பதில் காங்கிரஸ் உண்மையிலேயே அக்கரையோடு இருந்தால், வெறுமனே சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு, பலிகடாவாக்கப்பட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யவும் காங்கிரஸ் பாடுபட வேண்டும்.
அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகளில் காவி தீவிரவாத கும்பல்களுக்கு தொடர்பு இருப்பதை புலனாய்வு அமைப்புகள் சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த மாபாதக செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டது தெளிவுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் மீதுள்ள பழி, களங்கம் நீங்கியுள்ளது என்று சயீத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்
.
மேலும், காங்கிரஸ் தலைவர்கள் புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்திய இந்த உண்மைகளை காங்கிரஸ் தலைவி திருமதி. சோனியகாந்தி அவர்களை இழிவாக பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக மட்டும் நன்கு பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில் பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அப்பாவி மக்களை அவர்கள் முற்றுலும் மறந்துவிட்டனர்.

எனவே, குற்றமற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யவும் அவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்துவிடாமல் அவர்களின் தொழில் முன்னேற்றம் நிரந்தரமாக முடக்கப்பட்டுவிடாமல் பாதுகாக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென்றும்.

தேசம் முழுவதும் முஸ்லிம்களை எளிதாக பலிகடாவாக்கும் போக்கை வரும்காலத்திலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசாங்கத்தை காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் சயீத் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அவர்களின் நாக்புர் அறிக்கையை சுட்டிக்காட்டி குற்றமற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக அவர் குரல் கொடுக்கவில்லையென்றால் நாடெங்கிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்துகளை ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புபடுத்தியது வெறும் அரசியல் விளையாட்டாகி விடும்.

மேலும் பாபர் மஸ்ஜித் தகர்ப்புக்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் யை குற்றம் சுமத்துவதோடு நிறுத்தி கொள்ளும் காங்கிரஸ் கட்சி சட்டப்படி அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்